ஒருவேளை நியூக்ளியர் யுத்தம் நிகழ்ந்தால்? இந்தியா | பாகிஸ்தான்

ஒருவேளை நியூக்ளியர் யுத்தம் நிகழ்ந்தால்? இந்தியா | பாகிஸ்தான்

இந்தியா பாகிஸ்தான் சுதந்திரம் பெற்றதிலிருந்து இரண்டு நாடுகளுக்குமிடையே ஒரு கலக்கமான வரலாறே நிலவிக்கொண்டிருக்கிறது. எத்தனையோ தாக்குதல்கள் நடந்து அது சலிப்பை ஏற்படுத்தும் நிலைக்கு கொண்டுவருகிறது. தற்போதுள்ள நிலைப்படி பார்த்தல் மிகப்பெரிய நியூக்ளியர் யுத்தம் நிகழாதுதான் என்ற ஒரு ஆறுதல் இருக்கத்தான் செய்கிறது.

ஒரு வேலை இந்த நிலைமை எதிர்காலத்தில் தலைகீழானால். இரண்டு நாடுகளுக்கும் இடையே ஒரு நியூக்ளியர் யுத்தம் வெடித்தால் என்ன நிகழும். 


nuclear explosion war

இந்தியா அதிகாரபூர்வமாக வெளியிடாவிட்டாலும், தற்போதைய யூகத்தின் அடிப்படையில் இந்தியாவிடம் ஏறக்குறைய 110 நியூக்ளியர் ஆயுதங்கள் இருக்கலாம். அதேபோல் பாகிஸ்தானிடம் ஏறக்குறைய 90 நியூக்ளியர் ஆயுதங்கள் இருக்கலாம். இப்படிப்பட்ட நிலையில் வரும் போரானது, வைத்திருக்கும் ஆயுதங்களில் பாதி அளவாவது வெடித்துச்சிதறும். இது பூமியின் சூழ்நிலையை கொடூரமாகத் தாக்கும் மற்றும் அபாயகரமான மாற்றத்தை நிகழ்த்தும். நியுக்ளியர் குண்டு வெடித்ததினால் வெளியேறும் புகை, பூமியின் மேலடுக்கான stratosphere வரை ஆக்கிரமித்து, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் அதன் தாக்கம் நீடிக்கும். அதனால் நிரந்தர நோயாளிகள் அவ்விடத்தில் தோன்றுவர். வெடித்துச்சிதறிய பரப்புகளில் ஒரு சீரற்ற நிலை உருவாகி, உயிர்கள் வாழத்தகுதியிழந்த நிலமாக மாறி, இறுதியில் உள்நுழைவதற்கு தடை செய்யபடும் நிலைக்குத் தள்ளப்படும். உலக வரைபடத்தில் நிச்சய மாற்றம் நிகழும். வரலாற்றில் இது ஒரு கருப்பு தினமாக அனுசரிக்கப்படும்.

இதனால் உலகளவில் வெப்பநிலை அதிகரித்து Global Warming க்கு வழிவகுக்கும். வெப்பநிலை அதிகரித்தால், மரங்கள், செடி கொடிகள் மற்றும் சிறு புழுக்கள் பூச்சிகள் மடியும். Eco System முழுதும் உடைபட்டு, பாலைவன சூழல் உருவாக ஆரம்பிக்கும். வெடிக்கப்பட்ட ஆயுதத்தின் தன்மையை பொறுத்து, வெடித்துச்சிதறிய இடத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட வட்டாரம் வரை நரக பூமியாக மாறும்.

இதுமட்டுமல்லாது நியுக்ளியர் ஆயுதத்திலிருந்து வெளியேறும் கதிரியக்கம் நூற்றாண்டுகளாக அழியாமல் நீடிக்கும். இது கடல் வழியாகவும் பரவி மற்ற நிலப்பகுதியில் வாழும் உயிர்களையும் பாதிக்கும். நீர்நிலைகளிலும் கதிரியக்கம் கலக்கும். ஒரு வேலை உயிர்கள் தோன்றும் சூழல் மெல்ல மெல்ல உருவானாலும், அவைகளின் ஜீன்களில் கதிரியக்க தாக்கத்தினால் குறைபாடுகள் உண்டாகும். ஒரு பூர்த்தியற்ற உயிரின அமைப்பே தோன்றும். மேலும் நாம் நினைத்து பார்க்காத அளவிலான ஆபத்தையும் ஏற்படுத்தும்.

மேலும் இது போன்றதொரு அசுர தாக்குதலின் பின் விளைவுகள் உலகளவில் எதிரொலிக்கலாம். உலகின் பொரளாதார நிலையில் மாற்றங்கள் நிகழ்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தானை அதல பாதாளத்தில் தள்ளுவதோடு, இந்நாடுகளின் ஆதாரத்தில் இருக்கும் மற்ற நாடுகளிலும் இது எதிரொலிக்கும்.

எனவே போர் என்பது எப்போதுமே ஒரு நிரந்தர தீர்வாக அமையாது. எப்போதும் இந்தியா பாகிஸ்தானும் மட்டுமல்ல, மற்ற நாடுகளும் ஆயுதங்களை கையாளும் போது, மிகவும் சீரிய கவனத்துடனும் எதிர்கால சிந்தனையுடனும் இருக்க வேண்டியது அவசியம்.

ஜப்பானின் ஹிரோஷிமா நாகசாகி அணுகுண்டு வெடிப்பின் தாக்கம் இன்றுவரை உள்ளது என்பதை நாம் அறிவோம் அல்லவா.

உங்களின் கருத்தகளையும் பகிரவும்.

Post a Comment

Previous Post Next Post