Google Plus Shutdown in April 2019
Google Plus RIP |
சமூக வலைதளங்களின் ஆதிமூலம் Google இன் பிள்ளை Orkut. தொடக்கத்தில் இதனுடன் facebook, twitter சிறு பிள்ளைகள் போலவே காட்சியளித்தது. Orkut தான் அதில் மூத்தவன். Orkut இல் வண்ண வண்ண Themes, வேண்டியவாறு மாற்றக்கூடிய வண்ணங்கள் மற்றும் படங்கள் போன்ற வசதிகள் இருந்தன. ஆனால் facebook இலோ ஒரே ஒரு நிறம் மட்டுமே, மேலிருந்து கீழ்வரை நீல நிறம். twitter அதனுடைய வானத்தின் நீலத்தில் தோற்றமளித்தது. Orkut இல் கச கசவென்று நிறைய அமைப்புகள் ஒரு சேர இருந்ததால் என்னவோ, அதிகளவில் யாரும் அதை பயன்படுத்தவில்லை. மாறாக facebook இடம் தஞ்சம் அடைந்தனர். காலம் கடக்க கடக்க facebook இன் அமைப்பு மாறிக்கொண்டே இருந்தது. ஆனால் Orkut இன் நிலை அப்படியே இருந்தது.
ஒரு கட்டத்தில் Orkut ஐ மறந்து facebook இல் மட்டும் அனைவரும் வீழ்ந்தனர். Orkut அனாதையாகியது. ஜனவரி 2004 ஆம் ஆண்டு பிறந்த Orkut செப்டம்பர் 2014 இல் பத்து வயது குழந்தையாய் பரிதாபமாய் மடிந்தது. இதற்கு முக்கிய காரணம் கொலைகார facebook .
facebook ஐ எப்படியாவது பழிதீர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் அடுத்த ஒன்பது மாதத்திலேயே June 2011 இல் இன்னொரு குழந்தையை பெற்றெடுத்தது இந்த Google. அவன் பெயர் Google+. சற்று வித்தியாசமான தோற்றத்துடன், புத்துணர்வு நிறைந்ததாக காணப்பட்டது. Google இன் முதல் பக்கத்திலேயே இதற்கு ஒரு இடம் அளிக்கப்பட்டு இருந்தது. Google தான் பெற்றெடுத்த இந்த குழந்தையை அனைவரும் கவனிக்கதக்க வகையில் வளர்த்தது. இதனாலேயே ஒரு சிலர் இதனை வெறுத்தனர். Google மக்களை Google Plus இல் இணைய மறைமுகமாக வற்புறுத்துவதாக Google Plus லேயே மீம்கள் வந்தன.
இருந்த போதிலும் facebook ஐ விட Google Plus வேகமாக பரவியது. ஆனால் இது வெறும் பரவல் மட்டுமே. நாளடைவில் இதுவும் தனித்தன்மையை இழக்க நேரிட்டது. அதனால் Google Plus க்கு மீண்டும் புதுபொலிவு கொடுப்பதற்கு நான்கு வருடம் கழித்து அதன் தோற்றத்தை Nov 2015 இல் மாற்றியமைத்தனர். அதனால் அதன் வளர்ச்சியில் மாற்றம் நிகழும், அது தனது பரம எதிரியான facebook ஐ வீழ்த்தும் என Google லினால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் facebook கும் எதற்கும் சளைத்ததல்ல. போட்டியில் அதன் நன்றாகவே வீரியம் வெளிப்பட்டது. வெகுண்டெழுந்த facebook தனது தோற்றத்தையும் மாற்றி facebook Timeline, Graph Search, facebook Pages Likes, Reaches இன்னும் பல ஆயுதங்களை விரித்து விஸ்வரூபம் எடுத்தது. அதோடு நில்லாமல் மற்ற மொழிகளின் ரூபத்தையும் கொண்டு அதன் பாதையில் பல மைல்கற்களை அடுக்கிகொண்டே சென்றது.
இதனிடையே Twitter தனது Twitter Hashtag, Twitter Trends, Celebrity என்று தனது பாதையை தானே தீர்மானித்தது. தனது பங்கிற்கு Google Plus ஐ தாக்கியது.
Google Plus இன் வாடிக்கையாளர்கள் அதன் மீதுள்ள மோகத்தை விடுத்தது நாளடைவில் குறைய ஆரம்பித்தனர். இனி Google Plus இடம் facebook மற்றும் Twitter ஐ தடுத்து நிறுத்தும் சக்தி இல்லை என்று தெரிந்து கொண்ட Google அடுத்த நான்கு வருடத்தில் தான் பெற்ற தன் மகனை மிகுந்த மன வேதனையுடன் 02 Apr 2019 இல் கருணை கொலை செய்யவிருக்கிறது. Orkut ஆவது 10 வருடம் நீடித்தது. ஆனால் Google Plus வெறும் ஏழு வருடம் பத்து மாதம் மட்டுமே வாழ்ந்திருக்கிறது.
facebook மற்றும் Twitter இன் ராஜாங்கத்திற்கு முடிவு கட்டி, தனது கொடியை நாட்டி Google பழிக்குப்பழி தீர்க்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்,
إرسال تعليق