How does your voice make a child good or bad?
உங்களின் குழந்தையை எப்போதாவது ஒரு நாள் முழுக்க கவனித்துள்ளீர்களா ? குழந்தைகளின் மனதை படிக்க முயற்சி எடுத்துள்ளீர்களா? எவ்வாறு எதற்கு பதிலளிக்கிறார்கள் என்று தெரிந்து வைத்துள்ளீர்களா? இவ்வாறு நீங்கள் இருந்தால் நிச்சயமாக நீங்கள் ஒரு குழந்தையை வளர்க்க தெரிந்த பெற்றோர். உங்களுக்கு இந்த சமூகத்தின் சார்பாக வாழ்த்துகிறேன். ஏனென்றால் நீங்கள் இந்த சமுதாயத்திற்கு எதிர்கால நன்மையை செய்கிறீர்கள் அல்லவா.சரி, அப்படியெல்லாம் நான் இருந்ததில்லையே என்று நினைகிறீர்களா? கவலை வேண்டாம். நீங்கள் அறியவேண்டியதை அறிந்துகொள்ள முதற்படியை இங்கு பகிர்கிறேன்.
இங்கு குழந்தை என்பது பிறந்ததிலிருந்து 10 வயது வரை உள்ள குழந்தைகளை குறிக்கிறேன். அந்த காலகட்டத்தில் நீங்கள் எப்படி அணுகவேண்டும் என்ற இரகசியத்தையே கூறப்போகிறேன். ஆம், இது ரகசியமே. உங்களின் இந்த அணுகுமுறை குழந்தைகளுக்கு தெரியக்கூடாது. இதை உங்கள் மனதில் வைத்து மட்டுமே செயல்படுத்த வேண்டும். மற்றோரிடம் இதை விவாதிக்கும் முன் அருகில் உங்கள் குழந்தை இல்லை என்பதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.
குழந்தைகளின் அணுகுமுறைகளில், மிக முக்கியமான முதற்கண் அணுகுமுறை அவர்களிடம் எவ்வாறு பேசுகிறீர்கள் என்பது. பிறந்த குழந்தைகளின் மனது ஒரு வெற்று புத்தகம் போல். குழந்தைகள் வளரும் வரை அதை நீங்கள்தான் எழுதப்போகிறீர்கள். அதனால் சற்று கவனமுடம் அணுகவேண்டும். நீங்கள் எழுதும் முதல் பக்கம்தான், அவர்கள் எழுதும் கடை பக்கத்திற்கு அடிகோள் என்பதை எப்போதும் மறக்க வேண்டாம். ஒருவேளை நீங்கள் அதை சரியாக எழுதவில்லை என்றால், அவர்கள் உங்களை பற்றி தவறானவற்றை அடுத்த பக்கத்தில் எழுதிவிடுவார்கள்.
குழந்தைகளிடம் எவ்வாறு பேச வேண்டும்?
எப்போதும் குழந்தைகளிடம் பணிவான குரலிலேயே பேசுங்கள். இதையே குழந்தைகளும் பழகும். இவ்வாறு பணிவை நீங்கள் குழந்தைக்கு சொல்லாமல் சொல்லிகிறீர்கள். எப்போதும் குழந்தைகளுக்கு சொல்லி சொல்லி புரியவைப்பதைகாட்டிலும் சொல்லாமல் புரியவைப்பதே சாலச்சிறந்தது. ஏனென்றால் அவர்கள் உங்கள் சொற்களை பின்பற்றமாட்டர்கள், மாறாக உங்களின் பழக்க வழக்கங்களையே பின்பற்றுவார்கள்.
ஒரு வேலை நீங்கள் பணிவை இழந்து அதிக சப்தத்துடன் பேசினால், அவர்களின் மனதில் ஒரு வித படபடப்பு நிலையை உருவாக்கி, உங்களை பற்றிய மனபயத்தை விதைப்பீர்கள். இதனால் விளைவது என்ன? உங்களிடம் இருந்து தன்னை காப்பாற்ற அடுத்த திட்டத்தை தீட்ட ஆரம்பிக்கும். இது அவர்களின் சதியல்ல. அவர்களின் ஆழ்மனத்தின் தற்காப்பு நடவடிக்கை. எனவே அதீத சப்தம் குழந்தைகளின் மனநிலையை குலைக்கும். கவனம் தேவை.
சரி. எப்போதும் பணிவுடன் பேசினால், ஒரு வேலை அவர்கள் தவறான வழியில் சென்றுவிடுவார்கள் என்று அஞ்சுகிறீர்களா?
அப்படியென்றால் நீங்கள் மிகவும் புத்திசாலிதனமாக இருக்க வேண்டியது மிக அவசியம். உங்களின் விவேகமான சிந்தனையை வெளிப்படுத்த வேண்டும். அவர்கள் தவறான வழியில் சென்றால், நேராக அவர்களிடம் சொன்னால் அவர்கள் அதை கேட்கவில்லை என்று வைத்துகொள்வோம். இங்கு அவர்களை நாசூக்காக ஏமாற்றலாம். இதுவும் ஒரு வளர்ப்புமுறைதான்.
ஒரு வேலை குழந்தைகள் உங்களைவிட அதிபுத்திசாலி என்றால் ?
இப்போது நீங்கள் அவர்களை தடுத்து நிறுத்தலாம். அவர்கள்தான் அதிபுத்திசாலிகள் ஆயிற்றே, அவர்களிடம் உங்களின் நிலையை மற்றும் தவறான வழியின் பாதிப்புகளை ஆதாரத்துடன் மிகவும் கனிந்த மனதுடன்(கண்களில் நீருடன்) எடுத்து கூறலாம். இது அதட்டுவதைவிட நல்ல யோசனையே. ஆனால் இப்பேற்பட்ட நிலை பத்து வயது குழந்தைகளுடன் நிகழாது. பத்துவயதிற்குள்வரை அவர்கள் உங்களைவிட புத்திசாலியாக இருக்க வாய்ப்பில்லை. இது மிக அரிது. ஒருவேளை அப்படி இருந்தால் குறை உங்களிடம்தான். நீங்கள் குறைந்தது ஒரு பத்து வயது குழந்தையைவிட புத்திசாலியாக இருக்க வேண்டும் என்பது முக்கியம்.
இது ஒரு குழந்தை வளர்ப்பின் மேலோட்டமானா பதிவின் ஒரு அம்சம் மட்டுமே.
உங்களுக்கு ஏதேனும் ரகசியம் தெரிந்திருந்தால் Comment செய்யவும். மேலும் உங்களுக்கு வேண்டியவர்களுக்கு குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு இந்த பதிவு பொருந்தும் என்று நினைத்தால் அவர்களுக்கு இதை புரிய செய்யுங்கள் மற்றும் பகிருங்கள்.
You May Like:
إرسال تعليق