PUBG Makes Friends closer than anything
PUBG Online Multiplayer Game |
இவ்வுலகத்தில் நண்பர்கள் இல்லாமல் யாராலும் இருக்க முடியாது என்று சொல்லலாம். அது பல நண்பர்கள் வைத்திருப்பவரும் இருப்பார் அல்லது ஒரே ஒரு நண்பனை வைத்திருப்பவரும் இருப்பார். நிறைய நண்பர்கள் இருந்தாலும் எத்தனை பேர் நமக்கு நெருக்கமானவர்? ஒரு சிலரே. மற்றவர்கள் சற்று தூரம்தான். அவர்களுடன் நாம் அடிக்கடி பேசியிருக்க மாட்டோம் அல்லது நட்பை தொடர பிரயத்தனம்செய்திருக்க மாட்டோம். இது ஒரு குறையாக கருதவேண்டாம். ஏன் என்றால் அவர்களுக்கும் நம்மக்கும் எந்த ஒரு விஷயத்திலும் ஒரு கோட்டில் இன்னும் இணையாமல் இருக்கலாம். உதாரணமாக ஒருவன் அறிவியலில் ஆர்வமாக இருப்பான், மற்றொருவன் அரட்டை அடிப்பதில் ஆர்வமாக இருப்பான். ஒருவன் நிறைய பேசுவான் மற்றொருவன் பேசவே மாட்டான். ஒருவன் எப்போதும் உடற்பயிற்சியில் ஈடுபடுவான், மற்றொருவன் தூங்கிக்கொண்டே இருப்பான். இவர்களுக்குள் ஒத்துபோகாவிட்டாலும், தங்களுக்குள் நண்பர்கள் என்று சொல்லிகொள்வர், ஏனென்றால் ஒரே பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ படித்துக்கொண்டிருப்பர்.
படித்து முடித்தவர்களுக்கு, உள்நாட்டு வேலை, வெளிநாட்டில் வேலை என்ற காரணத்தால் பிரிய நேரிட்டிருக்கும். மீண்டும் அவர்கள் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியிருக்காது. அவர்களும் அதற்கு முயற்சி எடுத்திருக்க மாட்டார்கள். ஆனால் அவர்கள் நினைவில் ஒரு இடைத்தை மட்டும் நிரப்பி இருப்பார்.
உங்களுக்கும் இது பொருந்தும் என எண்ணுகிறேன்.
இவ்வாறான நிலையில் சமூக வலைதளங்களின் வரவு ஒரு மாபெரும் பரிசாகும். பிரிந்த நண்பர்கள் நிரந்தர பிரிவை தடுத்து நிறுத்தி அவர்களுடன் எப்போதும் தொடர்புடன் இருப்பதற்கு ஒரு சிறந்த கருவியாக செயல்படுகிறது. சமூக வலைதளங்களில் இல்லாதோர் இல்லை எனும் நிலையே இப்போது உள்ளது.
ஆனாலும் நண்பர்களுடனான நெருக்கம் இன்னும் உருதியடயவில்லை. என்னதான் தகவல்களை பகிர்ந்து கொண்டாலும், நேரடிய பேசும் வசதி இருந்தும், எப்போதாவது பேசினாலும் கடமைக்கும் மட்டுமே அதை பயன்படுத்தும் சூழல் நிலவுகிறது. ஒரு சிலரே தகவல் பரிமாற்றத்துடன் தங்கள் நண்பர்களுடன் பேசி ஆனந்தமடைகின்றனர். இருந்தும் அவர்களுடன் சிறு வயது விளையாட்டுக்கள் விளையாடும்போது கிடைக்கும் மகிழ்ச்சி சமூக வலைதலங்களினால் தரமுடிவதில்லை.
வாழ்கையில் ஒவ்வொரு சூழலிலுள் மனிதனுக்கு ஆறுதல் மற்றும் மகிழ்ச்சி தரக்கூடிய ஏதேனும் ஒன்று உருவாகிக்கொண்டுதான் உள்ளது. நாம்தான் அதனை தேடி அறியவேண்டும்.
சமூகவளைதலங்களுக்கு அடுத்த படியாக தனது பிரம்மாண்டமான கால்களை பதித்திருக்கிறது PUBG (Player Unknown Battle Ground). இது சிறுவர்கள் இளைஞர்கள் என்று அனைவரையும் இழுத்தது. அதன் வசதிகளால் அனைவரையும் கட்டுக்குள் நிறுத்தியது. இன்று PUBG என்றால் தெரியாதவர் மிகக்குறைவு. அதனை வெறுப்பவரும் அதன் பெயர் அறிந்திருப்பர் என்பது நிதர்சனம்..
Online Games இல் இதுவரை கண்டிராத அளவுக்கு பயன்படுத்துவோரின் எண்ணிக்கை இதன் மூலம் உச்சத்தை எட்டியது. நண்பர்களுடன் விளையாட்டு என்பது அனைவராலும் விரும்பகூடியது. ஆனால் அதற்கு வழியில்லாதவர்களுக்கு இது ஒரு சொர்கவாசலாகும். தங்களது நண்பர்களுடனான நட்பையும், அவர்களுடன் விளையாடும் மகிழ்சியையும்இதன் மூலம்பெறுகின்றனர் அநேகர். இது நட்புக்கு ஒரு பெரிய பாலமாக அமைந்து சாதாரணமான நட்புகளை வலுவான ஒரு நட்பாக இணைகிறது. மேலும் வெளியூர் மற்றும் வெளிநாடுகளில் இருப்பவரும் தூரத்தில் உள்ள தன் நண்பர்களுடன் ஒருமித்த உணர்வுடன் சற்றுநேரமாவது விளையாட்டு உணர்வுடன் திளைத்திருக்க இது ஒரு அரங்கமாக இருக்கிறது. விளையாட்டு உணர்வு ஒரு மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்றுதானே?
PUBG என்ற ஒற்றை சொல்லில், நமது ஒற்றுமை வலுப்படுமாயின் அதனை எப்போதும் தொடர்வோம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அதன் மூலம் நண்பர்களுடன் இணைந்தும், புதிய நண்பர்களுடனும் நமது விலைமதிப்புள்ள நேரத்தை சிறிது நேரம் பயன்படுத்தி மகிழ்ச்சியில் உறைவோம்.
إرسال تعليق