Why Women’s Day? Why there is no Men’s Day? | ஆண்களும் பெண்களும்

Why Women’s Day?

பொதுவாக ஏதேனும் விசேஷம் வந்தால், வீட்டில் சந்தோசம் நிறைந்திருக்கும். இப்படி வருடத்தில் ஒரு முறை வரும் பண்டிகையை நாம் வெகுசிறப்பாக கொண்டாடும் எண்ணம் கொள்வது இயல்பு. ஆனால் இப்பேற்பட்ட தினத்தை நாம் ஏன் வருடத்தில் ஒரு முறை கொண்டாடுகிறோம் என்ற கேள்வி உங்களுக்குள் தோன்றியிருக்குமாயின், இது உங்களின் சிந்தனையை தூண்டும் ஒரு பதிவே.

விசேஷம் அல்லது பண்டிகை என்றால் என்ன?
தினம் தினம் நாம் நம் வாழ்கையை வாழ்கிறோம். அதில் பல்வேறு செயல்கள் நிகழ்வுகள் இன்பங்கள் துன்பங்கள் அடங்கும். ஆனால் நமக்குத்தேவையான ஒன்றை தொடர்ந்து செய்ய முடியாத ஒன்றை மெது மெதுவாக அதை விட்டு விலகிச் செல்வோம். ஆனால் அதன் தேவை மீண்டும் தேவைப்படும் போது, அதை திரும்பபெருவதற்கு மீண்டும் பல தடைகளை தாண்ட வேண்டியிருக்கும். திரும்பபெறும் நிகழ்வு அடுத்த பத்தாண்டோ அல்லது நூறாண்டுகளோ கழித்து வரலாம். ஒருவேளை அதன் தேவை இல்லாவிடினும், அதனை நாம் தொடர்ந்து செய்து கொண்டு வருவதினால், அதன் தேவை வரும்போது இலகுவாக திரும்பப்பெறலாம்.

சரி விசயத்திற்க்கு வருவோம். பொங்கல், தீபாவளி, நினைவு நாள் போன்றதொரு நாட்களை மீண்டும் மீண்டும் நினைவு படுத்தினால்தான் நாம் அதனை பின்பற்றி அதன் மகத்துவத்தை அறிய இயலும். ஏனென்றால், அதை நாம் தினசரி வாழ்கையில் செய்வதில்லை, அவசியமும் இல்லை. இது போன்றதொரு நாட்களையே பண்டிகை என்போம்.

ஒன்றை எப்போதும் மறக்காமல் இருக்க நினைத்து, அதனை பின்பற்ற ஏற்படுத்தப்பட ஒரு நாளையே விசேஷ தினம் என்போம்.

பெண்கள் தினம்:

பெண்கள் தினமும் அது போன்றதொரு செயலே. மிகவும் சிறப்பானது.

womens-day


அப்பேற்பட்ட பெண்களுக்கு, ஒரு காலத்தில் அவர்களின் உரிமையை மீட்கவே இந்த பெண்கள் தினம் கொண்டு வரப்பட்டது. கடந்த காலத்தில், பெண்களுக்கு, அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டது. தினம் தினம் இந்த சமுதாயம் இதை நினைவில் கொள்ளாததால், அவர்களுகென்று ஒரு தினம் உருவாயிற்று, அதை நினைவூட்ட.

இவ்வாறு "பெண்களின் உரிமை பறிக்கப்படுகிறது, சரிபாதி உரிமை வழங்குவதைச் செய்ய தவறுகிறோம்" என்ற நினைவை ஏற்படுத்த மீண்டும் மீண்டும் அதனை நினைவூற்ற அதை காரணமாகவே பெண்கள் தினம் வந்திருந்தால், இது ஒரு அவல நிலைதான். ஒருவேளை அவர்களுக்கான சரிபாதி உரிமை கிடைத்திருந்தால், பெண்கள் தினம் என்ற ஒன்று தோன்றியிருக்காமலும் இருக்கலாம். ஆண்கள் அனைத்திலும் அனைத்தும் கிடைக்கப்பெற்று இருந்திருப்பர் போலும், பெண்களின் நிலையை ஒப்பிட்டிருந்ததால். இதனால்தான் ஆண்களுக்கென்று ஆண்கள் தினம் சிறப்புவாய்ந்ததாக இல்லையோ?

ஆனால் இனி நாம் கொண்டாடவிருக்கும் பெண்கள் தினம் அதன் அர்த்தத்தில் இல்லாமல், கீழகூறும் நோக்கதிலிருந்தால், பெருமை கொள்ளுங்கள்.

இந்த ஒரு நாளில் நாம், நம்மை பெற்றெடுத்த, நம்முடன் பிறந்த, நமக்காக வாழ்கிற, நமக்கு தேவையான பொழுதில் உதவிக்கரம் நீட்டிய, நம்மை தேற்றிய, நம்மை எப்போதும் சிரிக்கவைத்த பெண்களை ஒரு ஐந்து நிமிடம் அமைதியாக எண்ணிப்பார்த்து ஆனந்தம் கொள்வதே அவர்களுக்கு திருப்பி செய்யும் நன்றி ஆகும். பெண்கள் தினம் பெண்களின் நம் வாழ்வின் அங்கமென நினைத்து, அவர்களின் பெருமைகளை நினைவு கூறும் தினமாகக் கருதினால் மிகவும் சிறப்பானது.

இதை படிக்கும் போது உங்களின் நினைவுக்கு வரும் பெண்களை எபோதும் நினைவு கூறுங்கள், வாழ்கையில் அவர்களின் நினைவுகளே உங்களின் பொக்கிஷம்.

பெண்களின் உரிமையை தினம் தினம் வாழ்வின் ஒரு அங்கமாகவும், பெண்களின் பெருமையை வருடம் ஒருமுறை நினைவாகவும் கொண்டாடுவோம்.

You May Like:
Avatar

Post a Comment

Previous Post Next Post