ஒரு டீ கடை ஒரு கோடி லாபம் | Best Tea Shop Business Plan | Tamil Stories

One crore turn over from Tea Shop | Tamil Stories | Kathaigal


tea shop business plan

மகேஷ் தன்னுடைய வீட்டில் விரல்களை எண்ணி எண்ணி ஏதோ சிந்தித்துக்கொண்டு இருந்தான். அவன் முன் மேஜையில் காபி ஒன்று வைக்கப்பட்டிருந்தது. இவன் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று எண்ணிக்கொண்டே வீட்டின் உள்ளே நுழைந்தான் மகேஷின் நண்பன் அருள்.

அருள் "டேய் மகேஷ் என்ன பண்ணிக்கிட்டுருக்க. வெயில்ல ரொம்ப மண்ட காஞ்சிருச்சா."

மகேஷ் "வா டா வா. ஒன்னும் இல்ல சும்மா ஒரு கணக்கு."

அருள் "என்னது கணக்கா. நம்ம இன்ஜினியரிங் படிச்சி முடிச்சி மூணு வருஷம் ஆச்சி. இப்ப என்னடா புதுசா கணக்கு. இன்னும் அதுக்கே வேலை எதுமே கிடைக்கல. இப்ப என்னத்த யோசிக்கிற."

மகேஷ் "ஆமா. அத விடு. அத பத்தி பேசாத. கடுப்பா இருக்கு"

அருள் "சரி. இன்னிக்கி ஒரு இன்டர்வியுவ் இருக்கு. வர்றியா போலாம்"

மகேஷ் "போடா. அங்க போன அதுக்குன்னு ஒரு கூட்டமே வரும். காரணமே தெரியாம ரிஜெக்ட் பண்ணுவானுங்க."

அருள் "சரி. உனக்கு இண்டரஸ்ட் இல்லனா விடு. நான் போயிட்டு வர்றேன். அப்புறம் பாரீன் ட்ரை பண்ண வேண்டியதுதானே."

மகேஷ் "என்னடா பாரீன். அங்க போன பணம் கட்ட சொல்றானுங்க. அப்பறம் சம்பளம் பாத்தா அதிக பட்சமா 30 இல்ல 40 தான் வருது. அதுலயும் எங்கடா நம்மளால சேவிங்க்ஸ் பண்ண முடியுது. அப்பறம் ஊருக்கு அடிக்கடி வரவே முடியுறது இல்ல. ஒட்டு போட முடியாது, பொங்கல் தீபாவளி இப்படி எந்த விஷேசத்துக்கும் வரவே முடியாது."

அருள் "என்னடா சொல்ற. அப்டின்னா வீட்டிலேயே இருக்க போறியா என்ன?. அப்பறம் எப்படா செட்டில் ஆகுறது. என்னதான் பண்ண போற"

மகேஷ் "டீ கட வைக்கபோறேன்" என்றான் சிரித்துக்கொண்டே.

அருள் "என்னது டீ கடையா. பாக்குறவங்க என்ன நெனப்பாங்க. இன்ஜினியரிங் படிச்சிட்டு டீ கடைன்னா நல்லாவா இருக்கு. அப்பறம் டீ கடை காரன்னு எவனும் மதிக்க மாட்டான். பொண்ணும் கிடைக்காது."

மகேஷ் "ஊர்ல இருக்குற மாதிரி டீ கடை வச்சா நல்லாவே இருக்காது. எவனும் மதிக்க மாட்டான். ஆனா நான் பிளான் பண்றதே வேற மாதிரி."

அருள் "என்னடா அது"

மகேஷ் "அதாவது,  நம்ம ஊருக்குள்ள இருக்குற கடை மாதிரி இருந்தா அப்படிதான் நெனப்பாங்க. நான் என்னோட கடைக்கு ஒரு பிராண்ட் பண்ணி அத பெரிய அளவுக்கு கொண்டு வந்து நிறைய பிரான்ச் வைக்கணும்ன்னு பிளான் பண்றேன் டா."

அருள் "டேய் ஒரு டீ கடைய இவ்வளோ பெருசா எப்டிடா வைப்ப. முதல்ல டீ கடைல எவ்ளோ வருமானம் வந்துட போகுது."

மகேஷ் "சரி ஒரு டீ எவ்ளோ"

அருள் "சாதாரணமா 10 ருபாய்"

மகேஷ் "ஒரு நாளைக்கு 300 பேருக்கு டீ வித்தா, 3000 ருபாய் வருமா?"

அருள் "ஆமாம்"

மகேஷ் "அப்டியே ஒரு மாசத்துக்கு 30*3000 எவ்ளோ வரும்னு சொல்லு"

அருள் "90000 ரூபாய். அடேயப்பா!! ஒரு டீ கடைல அவ்ளோ வருமா. இத நான் யசிச்சதே இல்லையே."

மகேஷ் "உடனே வாய பிளக்காத. இது டன் ஓவர் மட்டும்தான். செலவெல்லாம் போக ப்ராபிட் குறைஞ்சது 50000 வரும். இத கொண்டு வர்றதுக்கே நம்ம இந்த ஊர்லையே கிடைக்காத அளவுக்கு நல்ல ஒரு டீ போடணும். நிறைய வெரைட்டி காட்டனும். அது மட்டும் இல்ல, நிறைய அலுவலகத்துல போய் நேராவே டெலிவரி பண்ணுனா இன்னும் நிறைய டீ காப்பி விக்கலாம். இன்னும் லாபம் ரெண்டு மடங்கு வரும். இதுக்கு பிராண்ட் பண்றது ரொம்ப முக்கியம். அதோட கடை ஒரு மெயினான இடத்துல இருக்கணும். இன்னும் நெறைய உத்திகள் இருக்கு. அத்தான் காலைல இருந்து கணக்கு போட்டுட்டு இருந்தேன்"

அருள் "டேய். ஐடியா நல்ல இருக்கே. என்னையும் பார்டனரா சேத்துக்கோடா"

மகேஷ் "நீ இல்லாமவாடா. உன்னையும் சேத்துதான் யோசிச்சிக்கிட்டு இருந்தேன். உன்னையும் சேத்து என்னோட மாத வருமான இலக்கு 3 லட்சம். எப்டியாவது ஒரு நாளைக்கு 1000  பேர் நம்ம டீ காப்பி குடிக்கிற மாதிரி உருவாகிட்டா போதும். இது சாத்தியம் டா அருள். அது மட்டும் இல்ல டீ காப்பி இல 20 க்கும் அதிகமா வெரைட்டி யோசிச்சி வச்சிருக்கேன். நானே நல்ல டீ தூள், காப்பி தூள் ஆர்டர் எடுத்து நம்ம கடைல வித்தியாசமான முறையில கலக்க போறேன். அதோட சீனா பிஸ்கட், கொரியன் பண்ணு , இப்பிடு புதுசு புதுசா டீக்கு சைடு டிஷ் வச்சி, ம்ம். இன்னும் நிறைய ஐடியா இருக்கு. எதிர்காலத்துல இந்த சிட்டிலையே எல்லாரும் என்னோட டீ காப்பி குடிக்கிற அவளுக்கு வரணும்னு நினைக்கிறன். எப்படியும் வருஷத்துக்கு ஒரு கோடி வருமானம் வர்ற மாதிரி உருவாக்கணும். இது என்னோட நீண்ட கடைசி லட்சியம். இப்போதிக்கி மாசம் ஒரு லட்சம் வர்ற மாதிரி உருவாக்குவோம்."

அருள் "ம்ம்.. இந்த அளவுக்கு வருமானம் வந்த நம்ம ஏன்டா இன்னொரு வேலை தேடனும். வெளிநாட்டுக்கு ஏன் போகணும். நம்ம இருக்குற ஊர்லையே கடைய போட வேண்டியதுதான்."

மகேஷ் "நம்ம ஊர்ல போட்ட அவ்ளோதான். கடை  ஓடாது. நம்ம ஊருக்கு பக்கத்துல இருக்குற சிட்டில போய்தான் போடணும். அப்பத்தான் நிறைய பேர் வருவாங்க. அதோடவே நிறைய ஆர்டர் எடுக்கலாம். இடம் பொருள் ஏவல் எப்போமே முக்கியம்டா"

அருள் "இதெல்லாம் எங்க இருந்துடா படிச்ச"

மகேஷ் "இன்னிக்கி ஒரு ஆர்டிகிள் படிச்சேன். அது ஒரு நல்ல ஊக்கமா இருந்திச்சி எனக்கு. அதுலதான் எனக்கு ஐடியா வந்திச்சி. நாமளும் ஒரு கடைய போட்டுட்டு பெரிய பிராண்ட் ஆக்கிட்டு, நிறைய மார்க்கெட் புடிச்ச அப்புறம், அங்கங்க வேலைக்கு ஆள் போட்டுட்டு, ஜஸ்ட் நம்ம முதலாளி மாதிரி இருந்து வருமானத கவனிச்சாலே போதும். நிறைய பேருக்கு வேலை குடுத்த மாதிரி இருக்கும். ஆனா அதுக்கு முதல்ல ரெண்டு வருஷம் நல்லா உழைக்கனும் டா."

அருள் "நீ படிச்சத எனக்கு ஷேர் பண்ணுடா. நானும் என்னைய ஊக்கபடுத்திக்கிறேன்."

மகேஷ் "இந்தா பாத்துக்கோ"


You May Like
Artificial Intelligence Salary 50 Lakhs PA
Earn Money from Tamil Writing
காளானால் கனத்த இதயம் | Software Engineer
How to create 1Cr worth Startup? | எப்படி ஒரு கோடி மதிப்புள்ள வணிக நிறுவனத்தை கட்டமைப்பது?
உங்கள் தொலைந்து போன போனை கூகிளில் தேடலாம்
  

Post a Comment

Previous Post Next Post