How to Earn Money in Lakhs from Tamil Article Writing?
தமிழ் மட்டும் தெரிந்திருந்தால் எதுவும் செய்ய இயலாது, எந்த வேலையும் கிடைக்காது என்று நினைப்போருக்கு, அவர்கள் காதில் சங்கு ஊதுவது போன்ற தகவல் இது.
தமிழ் மட்டும் படித்திருந்தால் நாம் எதோ தமிழ் வாத்தியார் வேலைக்கு மட்டும் தான் போக முடியும், அதுவும் குறைந்த சம்பளத்தில் என்று நினைப்பீர்கள். அது ஒரு காலத்தில் இருந்ததுதான். வெகு சிலரே அல்லது தமிழ் எழுத்தாளர்கள் சிலரே லட்சத்தில் வருமானம் ஈட்டினர். ஆனால் இன்று நிலைமை மாறுகிறது. அந்த அமைப்பி அனைவருக்கும் பொருந்தும் வண்ணம் சூழ்நிலை அமைந்து கொண்டிருக்கிறது.
எண்ணத்தை மாற்றுங்கள் (Change your Idealogy)
ஐடி யில் வேலை, மருத்துவர், அரசாங்க வேலை அல்லது நன்கு படித்து விட்டு வெளிநாட்டுக்கு சென்று வேலை செய்தால்தான் நாம் லட்சத்தில் வருமானம் ஈட்ட முடியும் என்ற எண்ணம் நம்மில் 99% மக்களிடம் உள்ளது. அவர்களுக்கு அது தவிர வேறெந்த நிகழ்கால நடைமுறையும் தெரியவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
மேலும் தமிழ் நன்கு பேச எழுத தெரிந்திருந்தால், நீங்கள் வீட்டை விட்டு எங்கேயும் செல்லாமல் பணம் உங்களை தேடி வரும் வழியும் தற்போதைய உலகில் உருவாகிவிட்டது. இதற்கு பெரிய அளவு முதலீடு என்ற ஒன்று வேண்டாம் என்பது ஒரு நேர்மறையான செய்தி.
சரி இனி என்னென்ன வாய்ப்புகள் தமிழில் கொட்டிக்கிடக்கிறது என்று பார்போம்.
இணையத்தில் தமிழ் நிலை (Internet Trend of Tamil)
இன்று இணைய தளங்களில் தமிழ் வாசிப்பாளர்கள் அதிகரித்த வண்ணம் உள்ளனர். இதனால் தமிழ் எழுத்துக்களுக்கு மதிப்பு உயர ஆரம்பித்துவிட்டது. இணைய தளத்தில் தமிழ் என்ற வார்த்தையை தேடுவோர் அசுர வேகத்தில் கடந்த நான்கு வருடங்களில் அதிகரித்துள்ளது. இதை தெரிந்து கொள்ள Google Trends Tool இல் சென்று "Tamil" என்ற வார்த்தைகான அளவீடுகளை பார்த்தால் உங்களுக்கே தெரியும்.
இதனால் இப்போது என்னவாயிற்று? என்று கேட்கிறீர்களா?
இதனால் தமிழில் இணையதளத்தை எழுதுவதும், தமிழில் செய்திகள், கட்டுரைகள், கதைகள், தளம் மொழி பெயர்ப்புக்கள், காணொளிகள் போன்ற எண்ணற்ற அம்சங்கள் தமிழில் அதிக அளவில் ஏற்றப்படுகின்றன. ஒரு பெரும் கூட்டம் தமிழில் தகவல்களை அறிய இணையத்தில் எப்போதும் அலைந்து கொண்டிருக்கிறது என்ற செய்தியை Google ஏற்கனவே கண்டுகொண்டது. அதனால் தான் Google Adsense இல் தமிழுக்கும் அங்கீகாரம் அளித்து விட்டது. ஆனால் நமக்குத்தான் எந்த ஒரு நல்ல செய்தியும் தாமதமாகத்தான் வருமே.
அதனால் இனி விழித்துகொள்ளுங்கள். தமிழுக்கே தற்போது ஒரு பெரிய சந்தை உருவாகிவிட்டது. உங்கள் பார்வையை பதியுங்கள். இன்னும் ஆங்கிலம் மட்டுமே முக்கியம், அந்த படிப்பை படித்தாக வேண்டும் இதை செய்தாக வேண்டும். எக்ஸ்ட்ரா கோர்ஸ் படித்தாக வேண்டும் என்ற பழைய என்னத்தை கொண்டிருந்தால், உங்கள் எண்ணங்களை சற்று திருத்தி மெருகேற்றிகொள்ளும் நேரம் இது. சற்று உங்கள் பார்வையை விசாலமாக்குங்கள்.
"இன்னும் அதற்கான வழிமுறையை கூறவில்லையே நண்பரே. அதை விடுத்து நிறையே எழுதுகிறீர்களே. நேராக சொல்லவந்ததை சொல்லுங்கள்" என்றெல்லாம் தோன்றுகிறதா?
என்ன செய்வது "நிறைய பேசி பேசியே நாட்டை ஆளலாம் என்று இருக்கும் போது, நிறைய எழுதி எழுதியே இணையத்தை ஆளக்கூடாதா?".
ஆம். நிறைய எழுத கற்றுக்கொள்ளுங்கள், பள்ளி பரீட்சையில் ஏதேதோ எழுதி பக்கத்தை நிரப்புவதை போல. இதுவும் ஒரு வகை திறமை தான். இதுவே கதாசிரியர், எழுத்தாளர்களின் அடிப்படை.
தமிழில் எழுத்து திறமை இருப்பதோடு, இணைய அறிவும் சேர்ந்து விட்டால், இணையத்தில் நீங்களும்ராஜா தான். நீங்கள் ஒரு பேராசிரியராக இருக்கலாம், வேலை தேடுபவராக இருக்கலாம், வேலை செய்பவராகவும் இருக்கலாம், அல்லது ஓய்வு பெற்றவராகவும் இருக்கலாம். உங்களுக்கு ஆர்வம் ஒன்று இருந்தாலே போதும் உங்களை தயார் செய்து கொள்ளவதற்கு.
வருமானத்தை எதன் மூலம் ஈட்டுவது? (How to earn money from Tamil Writing?)
இணையத்தில் நீங்கள் தமிழில் கதைகள்(Tamil Stories), கட்டுரைகள்(Tamil Articles), ப்ளாக்(Blogs), மார்க்கெட்டிங் ப்ளாக், மற்ற இணைய கம்பெனிகளுக்கு தகவல்கள் தமிழில் எழுதி கொடுப்பது(Writing Content to the companies), யூடுப் சேனல் க்கு ஸ்கிரிப்ட் எழுதி கொடுப்பது(Writing Scripts to Tamil Youtube Channels), நீங்களே யூடுப் சேனல் வைத்து நீங்கள் எழுதியதற்கு என்ற காணொளியை தயார் செய்து ஒளி பரப்புவது, இணையத்திலேயே உங்களின் சிந்தனைகளை புத்தகங்களாக (Writing Tamil Books and Publish)எழுதி அதை வெளியிடுவது, மாணவர்கள் மற்றும் மற்றவர்களுக்கு இணைய வழியில் தமிழ் கற்றுக்கொடுப்பது(Online Tamil Courses), மேலும் மற்ற துறைபற்றி தெரிந்திருந்தால் அதையும் கற்றுக்கொடுத்து சம்பாதிப்பது, பல்வேறு தரப்பினர்களுக்கு உங்களின் வழிகாட்டல்கள் தகவல்களை பதிவிடுவது அதன் மூலம் விளம்பரம் செய்வது, நாளிதழ்கள் அல்லது வார இதழ்கள் அல்லது இணைய இதழ்களுக்கு எழுதிக்கொடுப்பது என்பது போன்ற தமிழை மட்டும் கொண்டு மாதத்திருக்கு லட்சம் ஏன் அதற்கு மேலும் ஈட்டலாம். இதற்கு பொறுமை மற்றும் வழிகாட்டல் மிகவும் அவசியம். எழுதுவதுகூட ஒரு வகையில் எளிதாகிவிடும், ஆனால் அதை மற்றவர்களுடன் கொண்டு சேர்க்கும் போதுதான் பொறுமையும், அறிவும் அவசியம். அதற்கு எப்போதும் தேடலில் உங்களை வைத்து கொள்ளுங்கள் ஊக்கப்படுத்திக்கொள்ளுங்கள்.
அதற்கு முதல் படி, உங்களின் பார்வையை அதில் பதித்து அதற்கு ஏற்றாற்போல் உங்களை மெருகேற்ற துவங்குங்கள். இன்று விதைக்கப்படும் விதை நிச்சயம் ஒரு நாள் பலன் தரும் மரமாக வளரும். இன்றே துவங்குங்கள் உங்களின் முதல் எழுத்தை. குறைந்த பட்சம் 600 வார்த்தைகளை கொண்ட கட்டுரையை எழுத வேண்டும்.
Earn Money from Tamil Content Writing
தற்போது பொதுவாக ஒரு கம்பெனிக்கோ அல்லது இதழ்களுக்கோ உங்கள் கட்டுரை பிடித்திருந்தால், அவர்கள் சராசரியாக 1000 வார்த்தைகள் கொண்ட கட்டுரைக்கு 300 ருபாய் தருகிறார்கள். ஒரு நாளைக்கு 5 கட்டுரைகள் எழுதி கொடுத்தால், தினமும் உங்களின் வருமானம் 1500 ருபாய். இது போதுமே, சராசரி பொறியாளரின் சம்பளத்தை வீட்டிலிருந்த படியே எந்த ஒரு செலவுகள் இன்றியும் பெற்றுவிடுவீர்கள். மேலும் இதை நீங்கள் பகுதி நேர வேலையாகவும் எடுத்துக்கொள்ளலாம். இது கேட்பவரின் நிலை அல்லது எழுதுபவரின் திறமை பொறுத்து மாறுபடும். எழுதுவதற்கு சிந்தனை அல்லது கள ஆய்வு இருந்தால் நீங்கள் எங்கோ சென்று விடுவீர்கள்.
Earn Money from E-Book Publish
ஒரு வேலை நீங்கள் ஒரு புத்தகம் எழுதி Amazon Kindle Publishing இல் வெளியிடுகிறீர்கள் என்றால், அந்த ஒரு புத்தகத்தின் விலையை நீங்களே முடிவு செய்யலாம். புத்தகத்தின் விலை 100 ருபாய் என்று வைத்துகொள்வோம், உங்கள் புத்தகம் மக்களுக்கு பிடித்து இருந்துவிட்டால் அல்லது அவர்களின் பிரச்சினையை தீர்க்கிறது என்றால் நிச்சயம் வெற்றியடையும். நாளடைவில் உங்களின் புத்தகம் கணிசமாக விற்க ஆரம்பிக்கும். இது உங்களின் வாழ்நாள் முழுவதும் பணம் காய்க்கும் மரமாக மாறவும் வாய்ப்பு உண்டு. அதன் பிறகு மற்றோர் புத்தகத்தை எழுத துவங்கலாம். ஒரு மாதத்தில் உங்களின் புத்தகங்கள் 20 பிரதி விற்றால், உங்களுக்கு 2000 ருபாய் வரும் அதில் Amazon இன் பங்கு சிறிது பிடித்தமாகும். மேலும் உங்கள் புத்தகங்கள் வாசிக்கப்பட்டாலும் அதற்கும் உங்களுக்கு பக்கதிருக்கு ஏற்ப பணம் தரப்படும். இது நல்லா இருக்கே. ஒரு புத்தகத்திற்கே இப்படி என்றால் நீங்கள் ஒரு 30 நல்ல புத்தகங்கள் உங்கள் வாழ்நாளில் எழுதினாலே போதும். இப்படித்தான் எழுத்தாளர்கள் புத்தகங்கள் பணம் காய்க்கும் மரமாக மாறிவிடுகிறது. இது அவர்களின் வாழ்நாளில் மட்டும் அல்ல, அவர்களின் சந்ததியின் வாழ்விலும் பயன் நல்கும்.
Earn Money From Online Courses
நீங்கள் கற்றுகொண்டதை தமிழில் எழுதி, மற்றவர்களுக்கு பயணிக்கும் வகையில் காணொளியாகவும் இணையத்தில் பதிவிடலாம். உங்கள் காணொளியை Udemy போன்ற இணையத்தில் பதிவேற்றி, அதை கற்போரிடம் இருந்து தகுந்த சன்மானம் பெறலாம்.
Earn Money from Tamil Blogs
உங்களின் கட்டுரைகள் அல்லது திரட்டிய தகவல்களை நீங்களே வலைத்தளம் ஒன்றை நிறுவி பதிவிடலாம். அதன் மூலம் விளம்பரம் செய்தும் பணம் ஈட்டலாம். இந்த வழிமுறையில் நீங்கள் எண்ணிப்பார்க்காத அளவிற்கு வருமானம் ஈட்டலாம். உங்களின் வலைத்தளம் ஒரு நாளைக்கு சராசரியாக 10000 முறை பார்க்கப்படுகிறது என்று வைத்துகொள்வோம். இந்நிலையில் தினமும் உங்களின் சராசரி வருமானம் 4000 ரூபாய் வரை Google Adsense மூலம் வர வாய்ப்பு உள்ளது. இந்த வழியில் உங்கள் முதல் வருமானம் வருவதற்கு மூன்று மாதம் முதல் ஒரு சில வாருங்கள் மூட ஆகலாம். இது எல்லாம் நீங்கள் எந்த வகையான வலைதளத்தை பொருத்தது மற்றும் எத்தனை பேருக்கு இது தினமும் பயன் தருகிறது என்பது பொறுத்து அமையும். மேலும் மற்ற விளம்பரங்களையும் உங்களின் வலைத்தளத்தில் காண்பித்து வருமானம் ஈட்டலாம். இதெல்லாம் உச்ச நிலை. மேலும் இந்த உச்ச நிலையிலே வருமானமும் உச்சாமாகும். இதை அடிப்படையாக கொண்டே பல நாளிதழ், வலைதள கம்பனிகள் வெற்றிகரமாக இயங்கிகொண்டிருக்கின்றன.
இன்னும் மற்ற வழிகளையும் தேடி அறிந்து கொண்டால் உங்களுக்கு நிறைய வலிகள் கிடைக்கும். அனைத்திலும் உங்களின் கலாடியை பதியுங்கள். ஒரு கட்டத்தில் மாத்ததிருக்கு ஒரு லட்சம் என்பது மிகவும் எளிதாகிவிடும். அதன் பிறகு கூட உங்களின் முழு நேர வேலை விடுத்து, இதில் கவனம் செலுத்தலாம், ஏதேனும் வேலை செய்பவராயின்.
இதற்கான வழிமுறைகளை இன்னும் தெரிந்து கொள்ள உங்கள் தேடலை துவங்குங்கள் அல்லது பின்னூட்டமிடுங்கள், என்னால் ஆன Earn Money Tamil தகவல்களை அடுத்த பதிவில் தகுந்த தகவல்களோடு பதிவிடுகிறேன்.
You May Like
ஒரு டீ கடை ஒரு கோடி லாபம்
List Tamil Story Blogs and Youtube Channels
Tamil Blogs and Blogs to read
Tamil Input Tools
إرسال تعليق