கல்வியா செல்வமா வீரமா | The God of Trinity

கல்வி செல்வம் வீரம் இந்த மூன்றில் எது சிறந்தது என்ற கேள்விக்கு உங்கள் பதில் என்ன?

ஒவ்வொருவருக்கும் ஒரு பதில் இருக்கும். தங்களுக்கு எது குறையோ அதுவே சிறந்தது என்ற எண்ணம் தோன்றும். எப்போதும் இக்கரைக்கு அக்கரை பச்சைதான். இதற்கு சரியான விடை என்ன? சரியான பதிலை தேட முதலில் கல்வி செல்வம் வீரம் இதற்கான சரியான விளக்கம் யாது என்பதை அறிய வேண்டும். சற்றே சிந்தியுங்கள். 

கல்வி

ஒருவருக்கு கல்வி இன்றியமையாதது. கல்வி இல்லாதோருக்கு கண் இல்லை என்பார். செல்லும் இடம் எங்காயினும் கல்வி இல்லையெனில் எங்கும் சிறப்பு இல்லை. அவர் போற்றப்பட மாட்டார். ஞானம் என்பது இல்லாதபோது நமக்கு வரும் துன்பங்களினால் பயம் ஆட்கொள்ளும். பயத்தின் பிடியில் இருந்து விலக நிச்சயம் ஞானம் அவசியம். வாழ்வின் எக்கணமும் மனிதனை பயம் ஆட்கொள்ளும். கல்வி இருந்தால் எவ்வித துன்பத்தையும் எளிதில் வெல்லலாம். ஏனெனெனில் எந்த ஒரு சங்கடத்திற்கும் கல்வி தீர்வை கொண்டிருக்கும். சங்கடம் வருவதற்கு முன்னரே உங்களிடம் தீர்வு இருந்தால், அந்த சங்கடத்தை நோக்கி நீங்கள் புன்னை செய்வீர்கள் அல்லவா. மேலும் கல்வி இருந்தால் அந்த அறிவைக்கொண்டு எப்பேர்பட்ட செல்வத்தையும் சேர்த்துவிடலாம். தனது அறிவு சாதுர்யத்தால் எவரிடமிருந்தும் தப்பி விடலாம். அதனால் கல்வி செல்வத்தையும் வீரத்தையும் விட உயர்ந்ததா? சிந்தியுங்கள்.

கல்வியே படைப்பிற்கு ஆதாரம். படைப்பு என்பது ஒரு தொழில். அறிவு அதன் கருவி. இதனால்தான் படைக்கும் தொழில் செய்யும் பிரம்மாவிற்கு சரஸ்வதி துணைவியாக சித்தரிக்கப்படுகிறாள்.

செல்வம்

செல்வம் என்று சொன்னவுடம் உங்கள் மனதில் தோன்றியது யாது? நிச்சயம் பணம் பொன் பொருள் போன்ற அர்த்தங்களையே கொண்டிருப்பீர்கள். செல்வதிற்கான விளக்கம் பொதுவாக அப்படி இருந்தாலும் நிச்சயம் அதுவல்ல.

செல்வம் என்பது செல்வாக்கு. உங்களுடைய வார்த்தைக்கு, உங்கள் முகத்திற்கு, உங்களுக்காக எவ்வளவு பேர் செயாலாற்ற முன் வருகிறார்களோ அதுவே உங்களுடைய செல்வம். அது உங்களின் நண்பர்களானாலும் சரி, உங்களுடன் வாழும் எந்த மனிதர்களும் சரி. இன்னும் சற்று ஆழமாக சிந்தித்தால் செல்வம் என்பது பிணைப்பு ஆகும். அதாவது ஒற்றுமை என்று அறிய வேண்டும். இந்த செல்வாக்கு அல்லது உங்களுடன் வாழும் இனத்தின் ஒற்றுமை நிச்சயம் அந்த இனத்தின் வளர்ச்சிக்கு உதவும். அது உங்களை நிச்சயம் வாழ்வின் அந்த துன்பத்திடமிருந்தும் உங்களை காக்க முதலாக நிற்கும். அப்பேற்பட்ட செல்வத்தால் வாழ்வின் அனைத்து வித சங்கடங்களிடமிருந்தும் தங்களை காத்து கொள்ளலாம். அந்த ஒற்றுமையால் எப்பேர்பட்ட ஒன்றையும் தனதாக்கி கொள்ளலாம். எனில் வாழ்வதற்கு செல்வம் மட்டுமே போதுமானதா? கல்வி வீரம் தேவையற்ற ஒன்றாகிவிடுமா? சிந்தியுங்கள்.

காப்பதும் ஒரு தொழிலே. விஷ்ணு பகவானை காக்கும் கடவுளாக காண்கிறோம். அதற்கு ஆதாரம் அதற்கு தகுந்த ஒற்றுமை மற்றும் செல்வாக்கு. அதன் திருவுருவம் லக்ஷ்மி தேவி.

வீரம்

வீரம் என்பதன் பொருள் என்ன. மிகுந்த உடல் வலிமை, போரிட்டு எதையும் உடைத்தெறியும் வல்லமை. இப்படி சிந்தித்தால் அது தவறு.

வீரம் என்பதன் உண்மையான பொருள் மன தைரியம் ஆகும். எதையும் ஏற்கும் பக்குவம். தவறிழைத்தாலும், பழி சாட்டபட்டாலும், தன் கோபத்தை அடக்கி பொறுமை காப்பதே. இதுவே வீரம் ஆகும். இந்த உலகில் சகிப்புத்தன்மையே உண்மையான வீரம். எந்த ஒரு துன்பத்தை கண்டும் உடனே கொதித்தெழாமல், அதற்குரிய கட்டம் வரும் வரை பொறுமை காத்து அதை அழிக்க வேண்டிய நேரத்தை தேடுபவனே வீரத்தில் சிறந்தவன். இப்படிப்பட்ட வீரம்தான் மிகச்சிறந்தது எனக்கூறுவரும் ஏராளம்.

வீரத்தின் அடையாளம் சிவன். அதை சரியான விதத்தில் தூண்டுவது சக்தி ஆகும். பார்வதி தேவி சக்தியின் உருவம்.

சிறந்தது எது?

சரி, இப்போது மேற்கூறிய விளக்கத்தால் சற்று குழப்பம் ஏற்படலாம். எது உண்மையில் சிறந்தது என்று. ஒருவருக்கு கல்வியைதவிர வேறொன்றும் இல்லையெனில், அவருக்கு செல்வம் குறைவு ஏற்படும் வேலையில் தனது மன தைரியத்தை இழக்கலாம். இதனால் அவர் கொண்ட கல்வி மன ஆற்றல் குறைவால் செயல்படாமல் போகலாம். 

ஒரு வேலை செல்வம் மட்டும் கொண்டிருப்போருக்கு, தனது இனத்திற்கு நோய், மற்ற இயற்கையின் சீற்றங்களால் தாக்குதல் ஏற்படுமாயின், எந்த செலவாகும் இருந்தும் எவராலும் காக இயலாத நிலை உருவாகும். கல்வி அறிவு அற்ற நிலையில் அவர்களால் அதை எதிர்கொள்ள வழி தெரியாது, கடைசியில் சரணடைய நேரிடலாம்.

கல்வி அறிவு, விவேகம், ஒற்றுமை இல்லாமல், வெறும் மனதைரியம் மட்டும் உள்ளோருக்கு, பெரும் சங்கடத்தை எதிர்கொள்ளும் நிலையில் அவர்களின் மொத்த ஆற்றலும் வீணாக்கும் நிலைக்கு தள்ளபடுவர்.

எனவே கவளி அறிவு, செல்வம், வீரம் இந்த மூன்றும் இருந்தால் மட்டுமே மனிதன் தங்கள் இனத்தை இம்மண்ணுலகில் நீண்ட ஆண்டுகளுக்கு நிலைப்பெற வைக்க முடியும்.

மற்ற தமிழ் கட்டுரைகள்

உங்கள் தொலைந்து போன போனை கூகிளில் தேடலாம்
மனம் vs புத்தி vs அறிவு vs நம்பிக்கை
இறைவன் புள்ளிவடிவானவன் (நுண்ணுயுரி)
பேருந்து பயணத்திற்கான காலப்பயணம் - கதை
இயந்திரத்தின் பரிகாரம் - கதை


Post a Comment

أحدث أقدم