Batman and Joker

Batman and Joker Conversation


Joker: ஹே பேட்மேன். நீ ஏன் யாருக்கு பிரச்சனைனாலும் காப்பாத்த ஓடி வந்திடுற!!. இவனுங்க மேல அப்பிடி என்ன உனக்கு பெரிய அக்கறை?

Batman: இதுதான் மனுஷ இயல்பு.

Joker: மனுஷ இயல்பா? ஹி ஹி ஹி... மனுஷங்கள பத்தி உனக்கு என்ன தெரியும்? சந்தர்ப்பவாதிங்க. அவங்களுக்கு தேவைன்னா கொண்டாடுவாங்க, இல்லன்னா தூக்கி போட்டுடுவாங்க. நீ மட்டும்தான் வித்தியாசமானவன். அவுங்களுக்காக நீ ஏன் ரொம்ப அக்கறை காட்டுற?

Batman: மனுஷங்க சந்தர்பவாதியா இருக்கலாம். ஆனால் சூழ்நிலை நல்லா அமைஞ்சிட்டா, அந்தமாதிரி தப்பு செய்ற சந்தர்பமே இல்லாம போய்டும். அப்படி சூழ்நிலைய யாரவது சரி செய்யனும். அதைதான் நான் செய்றேன்.

Joker: நீ இத சரி செய்றதனால உனக்கு என்ன லாபம். ஹி ஹி ஹி...

Batman: லாபம் நஷ்டம் பாத்தா, இத பண்ண முடியாது.

Joker: ஆனா, நீ காப்பாத்த நெனைக்கிற மனுஷங்க லாபம் நஷ்டம் பாக்குறாங்களே, அதுகென்ன சொல்ற பேட்மேன்.

Batman: அது அவங்க தற்காப்பு மனப்பான்மை. நீ பண்றதுக்கு முன்னாடி அது ஒன்னும் குற்றம் இல்லையே. நீ கண்டிப்பா உன்ன மாத்திகிடனும்.

Joker: ஹ்ஹ ஹ ஹ ஹ... நான் எதுக்கு என்ன மாத்திக்கணும். எனக்கு எத்த மாதிரி இந்த உலகத்த மாத்ததான் விரும்புறேன். அந்த உலகத்துலயும் நீதான் என்னோட விளையாடனும். ஏன்னா நான் நினைக்கிற எடத்துல எவனும் இல்ல. இவனுங்கல்லாம் அற்ப பதறுங்க. நீ மட்டும்தான் எனக்கு சமமானவன். ஆனா நீ என்னடானா என்ன அவனுங்க மாதிரி இருக்க விரும்புற.

Batman: இதுக்கு மேல உன்கூட பேசி பிரயோஜனம் இல்ல. நான் கிளம்புறேன்.

Post a Comment

أحدث أقدم