Google Find My Phone
Find my Phone என்று Google இல் தேடினாலே போதும், உங்கள் போனை எளிதில் கண்டறியலாம். பொதுவாக நீங்கள் ஆண்ட்ராய்டு போனை Google கணக்குடன் இணைத்துதான் பயன்படுத்தியிருப்பீர்கள். உங்கள் போனின் இருப்பிடம், பாட்டரி, IMEI போன்ற தகவல்கள் கூகுளில் சேகரிக்கப்பட்டு இருக்கும். ஒரு வேலை உங்கள் போனை எங்கோ தொலைத்து விட்டீர்கள் அல்லது யாரேனும் எடுத்துக்கொண்டு சென்றுவிட்டனர் என்றால், நீங்கள் பதரவேண்டிய அவசியமில்லை. மிக எளிதில் ஒரு நிமிடத்திற்குள்ளாகவே அதை நீங்கள் கண்டு பிடிக்க இயலும்.தொலைந்த போனை எப்படி கண்டறிவது?
கூகிள் தளத்தில் Find my Phone என்று தேடினால் முன் தோன்றும் கருவியை சொடுக்கி உங்களின் போனுடன் இணைக்கப்பட்ட கூகிள் கணக்குடன் உள் நுழைந்து கண்டறிய இயலும். உங்கள் போனின் தற்போதைய இருப்பிடத்தை ஒரு வட்டத்தை குறிப்பிட்டு காட்டும். Play Sound என்ற பொத்தானை அழுத்துவதன் மூலன் உங்கள் போனை நீங்களே எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் ஒலிக்க வைக்க இயலும். உங்கள் பொன் Silent இல் இருந்தாலும் ஒலிக்கும் என்பது சிறப்பம்சமாகும். ஒரு வேலை நீங்கள் வெளியில் இருக்கும் போது யாரேனும் கூடத்தில் எடுத்து விட்டால், யாரையும் தொந்தரவு செய்யாமல், பதறாமல் அசால்டாக நீங்கள் திருடனை கண்டுபிடிக்கலாம். உங்கள் Call வரும் ஒலியிலேயே ஒலிக்கும்.Google Find phone மூலம் வேறென்ன அறியலாம்?
உங்கள் போன கடைசியாக எந்த நேரத்தில் பார்க்கப்பட்டது, எவ்வளவு பாட்டரி உள்ளது என்பதையும் அறிய இயலும். போனின் IMEI எண் மற்றும் Last Seen போன்ற தகவல்களை அறிய இயலும்.உங்கள் போனை யாரேனும் கண்டெடுத்தால்?
உங்கள் கூகுள் கணக்கை லாக் செய்யவும் இயலும். யாரேனும் கண்டெடுத்தால், உங்களின் lock முறையால் அவர்களால் உங்களை தொடர்பு கொள்ள முடியாது. அதனால் நீங்களே ஒரு தகவல் உங்கள் lock செய்யப்பட போனின் திரையில் தோன்றவும் செய்யலாம். இதனால் இந்த தகவலை அவர்கள் படித்து உங்களை தொடர்பு கொள்ளலாம்.முக்கியமான தகவல்களை என்ன செய்வது?
போனின் கூகிள் கணக்கை Sign Out செய்யவும் முடியும். இதன் மூலம் உங்கள் தகவல்களை திருடுபோவதை தடுக்கலாம். மேலும் உங்கள் தகவலை ஒரு நிமிடத்தில் அழிக்கவும் இயலும். ஆனால் தகவல்கள் அழிந்தால் உங்கள் போனை நீங்கள் மீண்டும் கண்டு பிடிக்க இயலாது. உங்கள் போனை விட தகவல்கள் முக்கியம் என்ற நிலையில் மட்டும் இந்த வழியை தேர்ந்தெடுக்க வேண்டும்.Find my Phone app வடிவிலும் கிடைக்கிறது.
إرسال تعليق