Different Ways of Google Search in Tamil
இன்று லட்சக்கணக்கானோர் பல்வேறு காரணங்களுக்காக ஒவ்வொரு நாளும் Google தேடலைப் பயன்படுத்துகின்றனர். அதுவும் தமிழிலும் Google தேடல் அதிகரித்து வருகின்றது. மாணவர்கள் பள்ளிக்காக, வணிகர்கள் அதை ஆராய்ச்சிக்காக, மேலும் மில்லியன் கணக்கானவர்கள் பொழுதுபோக்குக்காக அதைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் பெரும்பாலான மக்கள் கூகிள் தேடலை அதன் முழுத் திறனுடன் பயன்படுத்துவதில்லை. ஒரு எல்லைக்கு உட்பட்டே அவர்களின் தேடும் உள்ளீடு உள்ளது. இதனால் அவர்கள் நிச்சயமாக சரியான தளத்தை பெறுவது என்பது தப்பிவிடலாம்.Google தேடலை தமிழில் பயன்படுத்தும்போது பின்வரும் வழிமுறையை பின்பற்றினால் தேவையானவற்றை சீக்கிரமாகவும், மிகதுல்லியமாகவும் பெறலாம்.
இதோ உங்கள் தேடல் திறனை அதிகரிக்க 12 Google தேடல் குறிப்புகள் மற்றும் தந்திரங்களை இங்கே காணலாம்:
1. Tab Search | Google தேடலில் Tab Option
Google தேடலில் Tab Option பயன்படுத்துவது. பொதுவாக Video, Books, Images, News, Map, Shopping, Flights, Finance, Personal போன்றவற்றை நீங்கள் பார்ப்பீர்கள். இந்த Option பயன்படுத்தி, நீங்கள் என்னென்ன தேடல்களை செய்ய வேண்டும் என்பதை நீங்கள் வரையறுக்கலாம்.
உதாரணமாக நீங்கள் சமீபத்தில் ஒரு செய்தியைத் தேடுகிறீர்கள் என்றால், News Option பயன்படுத்தலாம். இவ்வாறு தேடினால் உங்களுக்கு தேவையான தகவலை எளிதில் பெறலாம்.
2. Quotes | மேற்கோள் குறியீடு
குறிப்பிட்ட தேடலைத் தேடும்போது, Google தேடலின் யூகங்களைக் குறைக்க மேற்கோள்களைப் பயன்படுத்தலாம். உங்கள் தேடல் உள்ளீடுகள் மேற்கோளுடன் இடுவதினால், உள்ளீட்டில் எவ்வித யூகமும் இன்றி முழு சொற்றொடர் இருக்கும் தளம் அப்படியே தேடப்படுகிறது.
உதாரணமாக, நீங்கள் அறிவியல் கதை புத்தகம் என்று தேடுகிறீர்களானால், இந்த வாக்கியத்தை ஒவ்வொரு சொல்லாக பிரித்து தேடலை நிகழ்த்தும்.
இரண்டிற்கும் வெவ்வேறு தரவுகளை நீங்கள் காணலாம்.
3. Hyphen to Exclude Words | ஹைபன் குறியீடு (-)
சில நேரங்களில் தேடலின்போது, உங்களின் தெளிவான உள்ளீட்டின் தரவுகளோடு, அது சம்பந்தமான மற்ற, ஆனால் நீங்கள் தேடாத தரவுகளும் கொட்டப்படும்.
உதாரணமாக
மேற்சொன்ன உள்ளீடுக்கு நீங்கள் விக்கிப்பீடியா அல்லாத மற்ற தமிழ் கட்டுரைகளை பெறுவீர்கள்.
4. Colon For Specific Sites Search | குறிப்பிட்ட தளங்களுக்கு colon குறியீடு (:)
சில குறிப்பிட்ட வலைத்தளங்களில் உள்ள கட்டுரைகளைப்பெற Google தேடலை கீழ்க்கண்டவாறு பயன்படுத்தலாம்.
அறிவியல் சம்பந்தமாக www.jeyamohan.in என்ற தளத்தில் தேடுவதற்கு, இவ்வாறு தேடினால் Google சரியான தரவுகளை வடிகட்டும்.
5. Find a page that links to another page | இணைப்புப்பக்கங்களில் தேடல்
ஒரு குறிப்பிட்ட பக்கத்தை தேடுவதற்குப் பதிலாக, ஒரு குறிப்பிட்ட பக்கத்திற்கு இணைக்கும் ஒரு பக்கத்தை தேடுகிறீர்கள்.
உதாரணமாக விகடன் கட்டுரையை எந்தெந்த தளத்தில் யார் மேற்கோள் காட்டியுள்ளார்கள் என்பதை நீங்கள் அறிய விரும்பினால் அல்லது நீங்கள் அதை இணைக்கும் அனைத்து தளங்களையும் கண்டுபிடிக்க இந்த தந்திரத்தை பயன்படுத்த வேண்டும்.
பலர் இந்த கூகிள் தேடலைத் அதிகமாக பயன்படுத்துவதில்லை. ஆனால் சிலருக்கு அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
6. Asterisk wildcard Search | நட்சத்திர குறியீடு (*)
Asterisk Wildcard Seach மிகவும் பயனுள்ள ஒரு அம்சம். இது எவ்வாறு வேலை செய்கிறது என்றால், நீங்கள் Google தேடலில் தேடல் சொற்களில் ஒரு Asterisk ஐ பயன்படுத்தும் போது, Google தானாகவே அவ்விடத்தை யூகத்தின் மூலம் பூர்த்தி செய்து தேடல் நிகழ்த்தும்.
உதாரணம்:
"என்னை * மாற்றி"
உங்களுக்கு அனைத்து வார்த்தைகளையும் தெரியாது என்ற நிலையில் தேட வேண்டிய பாடல் கண்டுபிடிக்க இது ஒரு சிறந்த வழி.
"என்னை * மாற்றி"
உங்களுக்கு அனைத்து வார்த்தைகளையும் தெரியாது என்ற நிலையில் தேட வேண்டிய பாடல் கண்டுபிடிக்க இது ஒரு சிறந்த வழி.
7. Find sites that are similar to other sites | பிற தளங்களைப் போன்ற தளங்களைக் கண்டறி
இது ஒரு தனித்தன்மை வாய்ந்த தேடல் ஆகும். உங்களுக்கு பிடித்த ஒரு வலைத்தளத்தைப்போல் அதேபாணியில் உள்ள மற்றொரு தளத்தை இம்முறையில் எளிதில் தேடலாம். சில சமயங்களில் இது மிகவும் குறைவான அல்லது துல்லியம் குறைவான தரவுகளை தருவதினால் சிறிது சலிப்பை ஏற்படுத்தலாம்.
உதாரணம்
உதாரணம்
மேலுள்ளதின் தரவுகளில் நீங்கள் அமேசான் இணைப்பை கண்டுபிடிக்க முடியாது. அதற்கு பதிலாக, நீங்கள் அமேசான் போன்ற ஆன்லைன் கடைகள் இணைப்புகளை காணலாம்.
8. Use Google search to do math | கணிதம் செய்ய Google தேடல்
Google தேடலை நீங்கள் calculater ஆகவும் பயன்படுத்தமுடியும். ஆனால் இது அனைத்து கணிதப் பிரச்சனைகளையும் தீர்க்காது என்பதை கவனத்தில் கொள்வது முக்கியம். ஒரு சாதாரண calculater ஆல் தீர்க்கூடிய கணிதத்தை இது தீர்க்கும்
இரண்டு உதாரணங்கள்:
இரண்டு உதாரணங்கள்:
நீங்கள் முதல் ஒன்றைத் தேடினால், அது 45 ஐ தரும். மேலும் கேள்விகளுக்கு பதில்களைக் கண்டுபிடிக்க நீங்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு கால்குலேட்டரை இது காண்பிக்கும்.
நீங்கள் இரண்டாவது முறையைத் தேடினால், அது Pi எண்ணின் மதிப்பைத் தரும்.
9. Search for multiple words at once | பல வார்த்தைகளை ஒரே நேரத்தில் தேடு
இது ஒரு வசதியான Google தேடல். உங்களுக்கு வேண்டியதை ஒரே ஒரு சொல் அல்லது சொற்றொடரை மட்டுமே தேடுவதன் மூலம் உங்களால் பெற இயலவில்லை எனில், இந்த தந்திரத்தை பயன்படுத்தி, நீங்கள் ஒரு வார்த்தை அல்லது சொற்றொடருடன் இரண்டாவது சொல் அல்லது சொற்றொடர் சேர்த்து தேடலாம்.
இங்கு மேற்கோள்களை பயன்படுத்துகிறோம் என்பதை நினைவில் கொள்க. இது அப்படியே இரண்டு உள்ளீடுகளையும் ஒரு சேர தேடும்.
மற்றொரு உதாரணம்:
மற்றொரு உதாரணம்:
இங்கு கதைகள் அல்லது அறிவியல் கதைக்களின் பக்கங்களுக்காக இது தேடப்படும்.
10. Gradually Add Search Terms | படிப்படியாக தேடல் சொற்கள் சேர்க்க
Google தேடல் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகளை தராத நேரத்தில், எளிமையான சொல் அல்லது சொற்றொடர் உள்ளீடு ஒரு சிறந்த முறையாக இருக்காது.
சிறந்த வழிமுறைக்கு மெதுவாக தேடல் உள்ளீட்டை சற்று விரிவாக்க வேண்டும்.
இவ்வாறு நீங்கள் படிப்படியாக உள்ளீட்டை மெருகேற்றினால் எளிதாக உங்கள் இலக்குகளை அடையலாம். மூன்றாவது முயற்சிக்கு முதல் முயற்சியில் இருந்து நேராக செல்லாதீர்கள், ஏனென்றால் இரண்டாவது படியைத் தவிர்ப்பதன் மூலம் நீங்கள் தேடுவதை நீங்கள் இழக்கலாம்.
11. websites familiar words | வலைத்தள வார்த்தைகள்
இது ஒரு மிக முக்கியமான Google Search ஆகும். Google Search செய்து இணையத்தை தேடும்போது பொதுவாக தளங்கள் பேசும் மொழியைப் பயன்படுத்தினால் பொருத்தமான தரவுகள் கிடைக்கப்பெறும்.
துரதிருஷ்டவசமாக, அவ்வாறான வலைத்தளங்கள் மக்களுக்கு பொருத்தமான திறவுகோலை கூறுவதில்லை;
"என் தலையில் காயங்கள்" பதிலாக "தலைவலி நிவாரணம்" என்று தேடலாம்.
12. Find a specific file | ஒரு குறிப்பிட்ட File தேடல்
இது Google தேடலின் ஒரு மறக்கமுடியாத அம்சம். ஒரு குறிப்பிட்ட கோப்பு அல்லது கோப்பு வகையைத் தேடும் திறன். ஒரு குறிப்பிட்ட PDF அல்லது PowerPoint கோப்பை நீங்கள் தேட விரும்பினால், இது மிகவும் அருமையானா தேடல் வகை.
உதாரணம்:
நன்றி...
إرسال تعليق