இவ்வுலகம் எவ்வாறு உருவாகியது ? என்ன நடக்கிறது ? என்னவெல்லாம் இருக்கிறது ? போன்ற கேள்விகளுக்கான விடைகளை அறிவியல் மற்றும் ஆன்மீக ரீதியாக பார்ப்போம்.
சற்று உங்களை கற்பனையை தட்டிவிடுங்கள். பிரபஞ்ச வெளியிலிருந்து பூமியை உற்றுநோக்குங்கள், பூமியின் நியதிகள் அனைத்தும் புலப்பட ஆரம்பிக்கும். இதைப்பற்றி ஆன்மீகவியலாலரிடம் வினவினால், அவருடைய கூற்று இவ்வாறு இருக்கும்.
"உலகத்தை படைத்தது பிரம்மா, காப்பது விஷ்ணு, அழிப்பது சிவன்" என்றுரைப்பார்.
சற்று அறிவியல் கண்ணோட்டத்தில் நோக்கினால், ஒரு உண்மை விளங்கும். அதாவது, உலகம் என்பது பல்வேறு வகையான உயிரினங்கள் சேர்ந்த கூடு. அனைத்திற்கும் அடிப்படை ஒரு செல் உயிரி. அதுவே அனைத்து உயிர்களின் உருவாதலுக்கும் மூல காரணம். உருவான உயிர்கள் நிலைப்பெற்று வாழ்வதற்கு காரணம் உணவு. அவ்வுணவை சக்தியாக மாற்றித்தருவதும் ஒரு நுண்ணுயிரியே. கடைசியில் உயிர்கள் இறந்த பிறகு அதன் உடலை சிதைப்பதும் ஒரு நுண்ணுறியே. ஆக உருவாதல், வாழ்தல், அழித்தல் அனைத்திற்கும் காரணம் நுண்ணுயிரியே. இதை யாராலும் வெறும் கண்ணால் காண்பது முடியாது, கடவுளைப்போல. கடவுள் என்பவன் புள்ளி வடிவானவன் எங்கும் இருப்பவன் இந்த நுண்ணுயிரி போல்.
إرسال تعليق