ஒற்றுமை - அறிவியல் பார்வையில்
இதில் இன்னொரு தத்துவமும் அடங்கியுள்ளது. அதாவது ஒற்றுமையுடன் இருந்தால், அந்த அமைப்பு / இனம் அதீத வலிமையுடன் விளங்கும்.
இப்பிரபஞ்சத்தில் எந்தவொரு அமைப்பில் உள்ள பொருட்கள் ஈர்ப்பு விசையுடன் செயல்படுகிறதோ, அவைகள் நிலையான போக்கை மேற்கொள்ளும். உதாரணமாக சூரிய குடும்பம்.
இவ்வாறு ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கும் இவ்வமைப்பில் ஒருவேளை பிளவு ஏற்ப்பட்டால், அக்கணமே அழிவானது ஆரம்பமாகும். அதாவது அவ்வமைப்பு வேறொரு நிலைக்குத் தள்ளப்படும்.
இது மனித இனத்திற்கும் பொருந்தும்.
எந்தபொருளால் எப்போதும் எதையும் சாராமல் தனிச்சையாக செயல்பட முடிகிறதோ, அதுவே நிலைத்திருக்கும். அப்படி ஒன்று இருக்கமுடியுமா ?
நிச்சயம் இருக்கிறது. அதுதான் ஆற்றல். ஆற்றலை ஒளியின் வடிவில் காணலாம். ஒளியானது எங்கும் இருக்க முடியும், எதையும் சாராமலும் இருக்க முடியும். அதைத்தான் ஆன்மீக பாணியில் கடவுள் என்கின்றனறோ ?
ஆற்றலை ஆக்கவோ அழிக்கவோ முடியாது. ஒரு வகை ஆற்றலை இன்னொரு வகை ஆற்றலாக மாற்றலாம். ஆற்றல் இப்பிரபஞ்சத்தில் எங்கும் நிறைந்திருக்கிறது.
அதேபோல் கடவுள் பிறப்பு மற்றும் அழிவற்றவர். அவர் எந்தவொரு வடிவிலும் தோன்றுவார். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள்.
ஒற்றுமையுடன் விளங்கும் சமுதாயம் தங்களுக்குள் நிலையான கடவுள் தன்மையுடன் விளங்குவர்.
I Want more Science ->
I Want more Science ->
إرسال تعليق