அறிவியல் - ஆற்றங்கறையும் அலைநீளமும் | Science of Wavelength

Science of Wavelength

சற்று காற்று வாங்குவதற்காக ஆற்றங்கரைக்கு சென்றிருந்தேன். நல்ல காற்றுடன் பறவைகளின் ரீங்காரமும் சேர்ந்து மயக்கத்தில் ஆழ்த்தியது. சிறுவர்கள் ஒரு சிறு குட்டையோரம் மீன் பிடித்துகொண்டிருந்தனர். சற்றே அதை வேடிக்கை பார்த்துக்கொண்டே சிறு வயது நினைவுகளை அசை போடத்துவங்கினேன். 


அது ஒரு கனாக்காலம். சிறுவர்களில் ஒருவன் திடீரென தன்வசமிருந்த மீன் பிடிக்க வைத்திருந்த கலனை குட்டையில் தவறவிட்டான். அதில் சற்றே பெரிதாகவும் ஆழம் அதிகமாகவும் இருந்ததால் இறங்குவதற்கு தயங்கினர். கலன் குட்டையின் நடுவில் மாட்டிகொண்டது. சிறுவர்கள் எவ்வாறு இதை மீட்பார்கள் என யோசித்துக்கொண்டே ரசித்துகொண்டிருந்தேன். தீட்டிய திட்டத்தை செயல்படுத்த துவங்கினர். சிறு சிறு கற்களை கலனை நோக்கி நீரில் எறிந்தனர். அதனால் உண்டான அலை அதை கரையை நோக்கி கடத்தியது, சீக்கிரமாக கடத்த அதிகமான கற்களை எரிந்து அலையின் எண்ணிக்கையை அதிகரித்தனர். அதனால் கலன் சீக்கிரமாக நகர்ந்தது, அதிலும் ஒரு சிறுவன் பெரிய பெரிய கற்களை எரியத்துவன்கினான். அதனால் அலையின் அளவு பெரிதாகி கலனை இன்னும் வேகமாக நகர்த்தியது. இப்போது கலன் சீக்கிரமாக கரையை அடைந்தது.




இந்நிகழ்வை ரசித்துக்கொண்டிருந்த நான், சட்டென்று அலையின் இயற்பியல் தத்துவம் ஒன்று நினைவுக்கு வந்தது. (நியூட்டன் போல் உணர்ந்தேன் :) )

திசைவேகம் = அதிர்வெண் * அலைநீளம்

அதாவது அலையின் திசைவேகத்தை அதிகரிக்க, அதன் அதிர்வெண்ணையும் அலை நீளத்தையும் அதிகரிக்க வேண்டும்.

இந்நிகழ்வில் கற்களின் எண்ணிக்கையானது அதிர்வெண்ணை அதிகப்படுத்துவதையும், கற்களின் அளவை பெரிதாக்கும் உத்தி அலை நீளத்தை அதிகப்படுத்துவதையும் நாம் அறியலாம்.

இதனால்தான் நீரின் அலையில் பயணித்த கலனின் வேகமும் அதிகரித்து சீக்கிரம் சேரவேண்டிய இடத்தை அடைந்தது.

I Want more Science ->

Post a Comment

أحدث أقدم