Avatar
"எப்போதெல்லாம் அகிலத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ, அப்போதெல்லாம் நான் அவதரிப்பேன்" - கிருஷ்ணன்மேலுள்ள கூற்றின் உண்மையான பொருள் என்னவென்று யாரேனும் அறிவீர்களா ?
இவ்வுலகில் தர்மத்தை கடைப்பிடித்து வாழ்பவர்களின் மனதில் அன்பானது நிறைந்திருக்கும். அப்பேற்பட்ட மகான்களின் பார்வையில் காண்பவைகள் அனைத்தும் இறை உருவமாக இருக்கும். சிறு சிறு தவறுகளையும் சகித்தும், தமக்கு நடக்கும் தீங்கினை பொருத்துக்கொண்டும் இருப்பார். அனால் அவர்களே பொறுக்க முடியா அதர்மத்தைக் காணும்போது, அவர்களுக்குள் ஒரு மாற்றம் நிகழும். அவர் தம் மனதில் எப்பாடுபட்டாவது அகிலத்தை அதர்மத்தின் பாதையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்ற ஒரு முடிவை துணிவுடன் எடுப்பார். அதர்மத்தால் பாதிக்கப்பட்டோர்க்கு நியாயம் வழங்க துடிப்பார். இதனால் தம் ஞானத்தைக்கொண்டு, வீரத்தைப்பெருக்கி செயலாற்ற முற்படுவர். அம்மாற்றமே இந்த அகிலத்தைக்காக்கும் ஒரு தீர்வாக அமையும். இவ்வாறு எவர் ஒருவரால் தம் ஞானம், வீரம், துணிவு, நியாயம். அன்பு கொண்டு அதர்மத்தை எதிர்க்கிறாரோ, அவரே இப்பூவுலகைக்காகும் அவதார புருஷராக அறியப்படுவார். அவரிடம் கிருஷ்ணனின் ரூபத்தை காணலாம். "நான் அவதரிப்பேன்" என்பதன் பொருள் "எனைப்போன்றோர் அவதரிப்பர்" என்பதாகும். இந்த தத்துவத்தின் அடிப்படையிலேயே மேற்சொன்ன கூற்றானது உருவானது.
إرسال تعليق