Fundamentals of C Programming for Beginners in Tamil

C Programming Fundamental for Beginners

அப்படியென்றால் என்ன என்று கேட்கிறீர்களா? எதை ஒன்றையும் கற்றுக்கொள்ள தொடங்கும் முன் அதன் அடிப்படையை முதலில் அறிவதே சிறந்தது. அடிப்படையே நுழை வாயில். 

சரி, இங்கு என்ன அடிப்படையாக கற்க வேண்டும்? உங்களுக்கு Program ஒன்றை எழுதச்சொன்னாலோ அல்லது காண்பித்தாலோ, உங்கள் மனதில் என்ன தோன்றும்?  அடிப்படை இல்லையென்றால் ஏதோ கிறுக்கப்பட்டுள்ளது என்றுதான் தோன்றும். "அட என்னடா ஒன்றும் புரியவில்லை. இவ்வளவு கஷ்டமா இருக்கே" என்ற எண்ணம் தோன்றும் இல்லையா. அடிப்படை நன்றாக தெளிவாகிவிட்டால், எந்த ஒரு Program ஐ பார்க்கும் போதும் எளிதில் புரிந்து கொள்ளலாம். மேலும் கற்கும்போது அதற்குத்தகுந்தாற்போல் நம் அனுபவ உதாரணங்களை மேற்கோள் காட்டி கற்கும்போது மிகவும் எளிதாகிவிடும்.

சரி, நமது கற்றலை துவங்குவோம்.

Getting Started C Programming

நமது இந்த அடிப்படையின் தொடக்கப்புள்ளி main ஆகும். அதாவது இங்கிருந்தே நமது Program இயங்க ஆரம்பிக்கும். எப்பேர்ப்பட்ட Program ஆனாலும் சரி main -யே ஆரம்பம்.

void main()
{
}

இதை main function அல்லது main call எனலாம். ஒரு Function ஐ அடையாளம் அறிய அதன் பெயருடன் எப்போதும் () குறியீடு இருக்கும்.
{} இந்த குறியீடு ஒரு Function இன் தொடக்கம் மற்றும் இறுதி ஆகும். அதாவது இதை Function Scope எனலாம்.

தற்போது நமது முதல் படியில் ஏறிவிட்டோம். உங்களின் Linux Console Open செய்யுங்கள். உங்களிடம் இல்லையென்றால் முன்னரே சொன்ன மாதிரி Online Compiler ஐ Open செய்யுங்கள்.

கீழுள்ள Program ஐ உங்கள் editor இல் type செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

How to compile a .c file in Linux? என்பதை பார்த்துவிட்டு வாருங்கள். 


#include<stdio.h>
int main()
{
printf("Hello World");
}

இப்போது உங்கள் output என்ன என்பதை பார்த்தீர்களா? 


Hello World

printf என்பது ஒரு funation call.  "Hello World" அதன் உள்ளீடாக கொடுக்கப்பட்டது. இந்த call உள்ளீட்டை திரையில் தோன்ற செய்யும். அதுவே இதன் வேலை. இது ஒரு Library call. அதாவது இந்த printf இன் Defenition ஏற்கனவே stdio Library இல் உள்ளது. அதனால்தான் நாம் stdio.h என்ற Library include செய்துள்ளோம். அப்போதுதான் Computer (அதாவது CPU வை கூறுகிறோம்) அந்த Library ஐ படித்து Printf இன் அர்த்தத்தை புரிந்து கொண்டு Compile செய்யும். 

இவ்வாறு Library Call பயன்படுத்தும் போது அதற்குரிய Library FileInclude செய்தல் வேண்டும். இங்கு Stdio என்பது ஸ்டூடியோ இல்லை. Standard input output Library :).


#include<stdio.h>
int main()
{
int a;
a
=10;
printf(
"value of a=%d", a);
}

இங்கு int a; என்பது புதியதாக அறிமுகம் செய்கிறேன். இதை என்னது? 

integer என்பதன் சுருக்கமே int. அதாவது நாம் ஒரு முழு என்னை கூறுகிறோம். இங்கு a என்ற ஒன்றுக்கு நாம் Memory ஐ தருகிறோம். 

int எவ்வளவு Memory ஐ எடுத்துக்கொள்ளும்?  

Memory  Bits and Bytes இல் அளவிடுவோம். 8Bits = 1Byte
bits bytes
1 Byte
int என்பதை நாம் Data Type என்போம். இதே போன்று இன்னும் சில உள்ளன. 

Basic Data Types in C


char, uchar   - 1Byte
short, uchort  - 2Byte
Int, uint     - 4Byte
float        - 4Byte
long, ulong   - 4Byte 
long long int  - 8Byte
double       - 12Byte

இவைகள் Basics Data Types ஆகும். இன்னும் சில  உள்ளன. அவைகளையும்  விட்டு வாருங்கள். C Data Types and Memory Allocation

Prev: Prerequisites in C Programming

Post a Comment

Previous Post Next Post